leader eng

சட்டவிரோதமாகக் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறிப் பல இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் 23 வயது இளம் பெண் ஒருவர்

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைபேசி ஊடாக அறிமுகமான இந்தப் பெண் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி ஒருவரிடம் கட்டம் கட்டமாக 30 லட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்ட பின்னர் தொடர்புகளைத் துண்டித்துள்ளார்.

இவர் தனது சொந்த இடம் அச்சுவேலி என்று தெரிவித்திருந்த நிலையில், அங்கும் அவரைத் கண்டறிய முடியவில்லை.

இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணநிரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

சந்தேகநபரின் வங்கிக் கணக்கிலக்கம் மற்றும் தொலைபேசிப் பதிவுகளைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸாரின் தொடர் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், டுபாயில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வழிகாட்டலிலேயே வெளிநாடு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான கொடுக்கல், வாங்கல்கள் பதிவாகியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி