இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அதிலிருந்து மீள ஐ எம் எஃப் கடன் ஓரளவிற்கு உதவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும்

நிலையில், பல்துறையைச் சேர்ந்த பன்னாட்டு வல்லுநர்கள் அது தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
நாட்டில் வறுமை, சமத்துவமின்மை மற்றும் கடன் ஆகியவை பல பரிமாணங்களைக் கொண்ட பிரச்சனைகள்- இலங்கை மக்களின் நலன்கள் மற்றும் தேவைகளை கருத்திக் கொண்டு அதற்கேற்ற வகையில் தீர்வுகள் கானப்பட வேண்டும் என்று என்று 182 வல்லுநர்கள் கூட்டாக எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளனர். இந்த கடிதம் இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பாக பல பொது விவாதங்களுக்கும் வேறு பல உரையாடல்களுக்கும் வழி செய்தது. இந்த திறந்த கடிதத்தை அந்த வல்லுநர்கள் ஐ எம் ஃப் அமைப்பிற்கும் தெரிவித்துள்ளனர்.


கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி ஐ எம் எஃப்பின் நிர்வாக குழு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நீட்டித்த நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் ஐ எம் எஃப்பின் அறிக்கைகள் எதுவும் சிங்களம் அல்லது தமிழில் இல்லை என்பது கவலையளிக்கிறது என்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த உடன்பாடு நீண்ட காலம் பொதுமக்களின் பார்வைக்கு வராமலேயே இருந்தது.


இலங்கை அரசும் மேட்டுக்குடி வர்த்தக அமைப்புகள் மற்றும் அதைச் சார்ந்தவர்கள் இந்த உடன்பாட்டை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வரவேற்றுள்ளனர். ஆனால் பல அரசியல் செயற்பாட்டாளர்கள், விமர்சனங்களை முன்வைக்கும் செய்தியாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை அரசிற்கும்-ஐ எம் எஃப்பிற்கும் இடையேயான உடன்பாடு குறித்து தொடர்ந்து கவலை வெளியிடுகின்றனர். இந்த உடன்பாடு பெருவாரியான உழைக்கும் மக்கள் மீது ஏற்படுத்தக் கூடிய எதிர்மறை தாக்கம் மற்றும் அடிப்படையில் ஐ எம் ஃஎப் அளித்திருக்கும் தீர்வு நிலைத்திருக்காது என்று தாங்கள் கருதுவதாக ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளனர்.
உலகளாவிய பொருளாதார ஒழுங்கின் அநீதிகளுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அதே வேளையில், உலகத்துடன் முழுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் மற்றும் உற்பத்தி ரீதியாகவும் ஈடுபடுவதற்கு, இலங்கைக்கு அதன் மக்களிடமிருந்து தெளிவான ஆணையைக் கொண்ட அரசாங்கம் தேவை.
இந்தாண்டு மார்ச் மாதம் ஐ எம் எஃப்புடன் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு முன்னால், அந்த கடனில் நிலைத்தன்மை, ஐ எம் எஃப்பின் ஆணை, ஊழலால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு அந்த கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆகியவை பற்றி இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
எனவே, இலங்கை அரசு மற்றும் ஐ எம் எஃப் ஆகியவை இலங்கையின் அனைத்து பிரஜைகளிற்கும் பொறுப்பு கூறுபவர்களாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் தொடர்ந்து நெருக்கடியான அம்சங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடனும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்பதை கவலைகள் வடிவில் தமது கருத்துக்களை அந்த திறந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
அனைத்திற்கும் மேலாக இலங்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது நாட்டின் பிரஜைகளிற்கு மிகவும் தீங்கை ஏற்படுத்துகிறது என்று பல்துறையில் வல்லுநர்களாக உள்ள அந்த 182 பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி