தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று (03) நடைபெறவுள்ளது.



இக்கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இதில் தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கைகள் மற்றும் உத்தேச புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் கருத்துக்களும் இங்கு கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்தும் ஆபத்தான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி