வடக்கு - கிழக்கு மாகாணங்களில் எரிபொருள் விநியோகம் - விற்பனை உரிமையை முழுமையாக இந்திய நிறுவனமான லங்கா ஐ. ஓ. சி

. நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கு சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.

இதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 150 எரிபொருள் நிலையங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

211 எரிபொருள் நிலையங்கள்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இலங்கையில் 2003 ஆம் ஆண்டு தொடக்கம் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை முழுவதும் 211 எரிபொருள் நிலையங்களையும் கொண்டுள்ளது.

அண்மையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை பெட்ரோலியம் ரேர்மினல் என்ற பங்கு நிறுவனத்தை ஆரம்பித்தது.

50 கோடி டொலர் பெறுமதியில் திருகோணமலை எண்ணெய் குதங்களை புனரமைத்து எரிபொருள் சேமிப்பு - விநியோகம் - விற்பனையை செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி