வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில்
பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன.
வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழக்கம் போல இயங்குவதாக அப்பகுதியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்றையதினம் வழக்கம் போல இயங்குவதாக அப்பகுதியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில பகுதிகளில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.