leader eng

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு

சவாலுக்குட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக கனேடிய தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கனடா, ஒன்ராறியோவின் “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” தொடர்பான சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டை சவாலுக்குட்படுத்த 60 க்கும் மேற்பட்ட தமிழ் கனேடிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் 2019 ஏப்ரலில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உறுதிப்படுத்தவும் அட்டூழியங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

இனப்படுகொலை அட்டூழியங்கள் தொடர்பில் விழிப்புணர்வு
சிறிலங்கா அரசை ஆட்டம்காண வைத்த ஒன்ராறியோ

இருப்பினும், சட்டமாக இயற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே தமிழர் இனப்படுகொலை கல்வி வாரம், அரசியலமைப்பு சவாலை எதிர்கொண்டது. பல சிங்களக் குழுக்கள் இந்த சட்டம், அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி, ஒன்ராறியோவின் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.

இருந்தபோதும், ஒன்ராறியோ உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பரலி, இந்த மனுவை நிராகரித்தார். இதன் மூலம் கல்வி வாரம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கல்வி வாரம் மீண்டும் சட்ட சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி