ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16 வது சீசன் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.



தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின.

நாணய சுழற்சியை வென்ற குஜராத் அணி தலைவர் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தேவன் கான்வே ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ஓட்ட குவிப்பில் ஈடுபட்டார்.

23 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் மொயீன் அலி 23 ஓட்டங்கள், பென் ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்கள், அம்பதி ராயுடு 12 ஓட்டங்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்த கெய்க்வாட் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஓட்டம் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ஆக இருந்தது.

அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன்பின் தலைவர் டோனியுடன் சான்ட்னர் இணைய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டோனி 7 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்தார்.

குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.

இதை அடுத்து 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16 வது சீசன் இன் முதல் வெற்றியை பதிவு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சுப்மன் கில் 63 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிஙஸ் சார்பில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுக்களை பெற்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி