அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
திருத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என பிரதமர் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினர் முன்வைத்த யோசனைகளை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சட்டவாக்கத்துறை,நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகளின் சாதகமான காரணிகளை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

“தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்த வாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் முன்மொழிந்திருந்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்கி 19ஆவது திருத்தத்தின் சிறந்த விடயங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் என அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி