சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை பிரதமர் என்ற முறையில் சந்தித்து கலந்துரையாட தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இதன்படி, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவாலை முறியடிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் தெரிவித்த பெறுமதிமிக்க கருத்துக்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். 

எவ்வாறாயினும், இந்த அழைப்பை ஏற்பதற்கு பிரதிநிதி ஒருவர் இல்லை என, சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுவருகின்றது. காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படுவது, இன, மத, மொழி மற்றும் கட்சிகள் கடந்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம்.

 இதனை தலைமை தாங்குபவர்கள் என்று எவரும் இல்லை, எனினும் மக்கள் ஒன்றாக முன்வைக்கும் கோரிக்கைகள் உள்ளன. அவரை, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்கள் பதவிகளை துறக்க வேண்டும். 

19 ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தல். 6 மாத்துக்குள் பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும். ஆட்சிகாலத்தில் சூறையாடிய மக்களின் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். என்பனவாகும். 

இன்று (ஏப்ரல் 14) ஆறாவது நாளாகவும் மக்களின் போராட்டம் தொடரும் பின்னணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறார். 

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் உட்பட பெருமளவான மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை “கோத்தகோகம” போராட்டம் இவ்வாறே தொடரும் என மக்கள் உறுதியக தெரிவித்துள்ளனர். மக்களின் பிரதிநிதிகள் என்று கூறி யாராவது பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் அவர்கள் எங்கள் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் மக்கள் சமூகவலைத்தளங்களின் ஊடாக வலியுறுத்தி வருகின்றனர்.

 எதிர் வரும் வாரங்களில் நாட்டின் நிலைமை மேலும் மோசம் அடையும், இன்னமும் தற்போதைய ஆட்சியாளர்கள் பின்னால் இருக்கும் மக்கள், அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளமுடியாது அரசுக்க எதிராக திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தால், சர்வதேசத்தின் கோபத்திற்க ஆழகாக நேரிடும் இவ்வாறு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் அரசு நேரடியாக போரட்டத்தை எதிர்க்க முடியாமல் தடுமாறி நிற்கின்றது.

 

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி