காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 'அத தெரணவிடம்' தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள அத தெரண செய்தி சேவை, தொடர்ந்து 5 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலுக்கு அழைப்பதாக தெரிவித்துள்ளது. 

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு கோரியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையான அரசாங்கம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி