3 ஆவது நாளாகவும் வெற்றிகரமாக தொடரும் மக்கள் போராட்டம்! ஜனாதிபதி செயலகத்திற்கு முன் தொடர்ந்து 3 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 

ஜனாதிபதி வெளியேரும் வரை செல்லப்போவதில்லை என்ற பிடிவாதத்துடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கூடாரங்கள் அமைத்து இரவு பகலாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை (9) காலை 8.30 மணிமுதல் கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பமாகிய பாரிய அரச எதிர்ப்பு போராட்டம், இன்று திங்கட்கிழமையும் (11) தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக கோரியும் , நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வேண்டியும் இன மத பேதமின்றி  'பக்க சார்பற்ற மக்கள் போராட்டம்' என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மணவர்கள்ளும் பல துரைசார்ந்தவர்களும் இந்த போராட்டத்தை வலுவடைய செய்துள்ளனர்.

சித்திரை வருடப்பிறப்பிற்கு இரு தினங்களே உள்ள நிலையில் மக்கள் தமது ஜனநாயக தீர்வுக்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.அத்தோடு, நலன்விரும்பிகளும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, கூடாரங்கள், படுக்கைகள் போன்ற பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவருபவர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் 500 மழைக் கவச ஆடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு உலர் உணவு மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டுவருகின்றன.இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடாரங்கள், தற்காலிக மலசலகூட வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன்ன.

இன, மத முறண்பாடுகளை முன்னிறுத்தி மக்களின் கண்களை கட்டி வெற்றிகொள்ளப்பட்ட ஆட்சி இன்று தடுமாறி நிற்கின்றது.இலங்கையின் அனைத்து மக்களும் இலங்கையர் என்ற தலைப்பின் கீழ் ஒன்றினைந்து தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த மக்கள் போராட்டம் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டியவை. 

இனியும் இன மத பேதங்களை ஏலமிடும் அரசியல் தலைமைகளை இலங்கை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்ற உறுதி இன்றைய இளைய சமூதாயத்தின் கோரிக்கைகள் மூலம் தெளிவாகின்றது.யுத்தம், சுனாமி,  குண்டு தாக்குதல், கொரோனா என பால அடிகளை தாங்கிய இலங்கை இப்போது விடியலைத் தேடி நகர்கின்றது.

 வரவிருக்கும் புத்தாண்டு இலங்கை ஜனநாயக போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பு, ஆனால் அதற்கு வழசெய்து வீடு செல்வாரா கோட்ட?

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி