தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசிடமிருந்து மக்களுக்கு நிவாரணப் பொதி!தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியை மக்களுக்கு வழங்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிவாரணப் பொதி இன்று தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.இதன்படி, சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு இன்றுமுதல் விநியோகிக்கப்பட உள்ளது.

அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளடங்கியுள்ள பொருட்கள்,

5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் ஐலண்ட் பால்மா, 1 கிலோ சிவப்பு சீனி, 100 கிராம் தேயிலை.


(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி