அரசாங்கத்தின் 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது விமல் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் மற்றும் பல இராஜாங்க அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருடன் இரகசிய சந்திப்புகளை நடத்தி வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கச்செய்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனிப்பெரும்பான்மையை இல்லாதொழிக்க தேவையான எண்ணிக்கையை விட அதிகமான உறுப்பினர்களை அரசாங்கத்திற்கு எதிராக அணி திரட்டி வருவதாக தெரிவித்த அவர், சரியான நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அந்தத் தேர்தலில் மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று மக்கள் எதிர்நோக்கும் கடும் சிரமங்களினால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது, கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலேயே எதிர்கொண்டது. தேசிய ரீதியில் 59.09 சதவீத வாக்குகளைப்பெற்ற அக்கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் உட்பட 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

பங்காளிக்கட்சிகளின் ஆதரவு கிட்டியது. அதன்பின்னர் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள், அரவிந்தகுமார், டயானா போன்றவர்களும் அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர். இதனால் நாடாளுமன்றத்தில் 160 ஆசனங்கள் அரச வகம் இருந்தன.

அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை (150) விஞ்சிய ஆதரவு. எனினும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையால் அரசு விசேட பெரும்பான்மையை இழந்துவிட்டது. சுதந்திரக்கட்சியும் காலைவாரும் நிலையிலேயே உள்ளது.

சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச ,சந்திம வீரக்கொடி, விதுர விக்ரமநாயக்க, பிரேமநாத் தொலவத்த ஆகியோருக்கும் அரசுடன் நல்லுறவு இல்லை. சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்து இ.தொ.காவும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எனவே, மொட்டு கட்சிக்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான சாதாரண பெரும்பான்மை ( 113 ஆசனங்கள்) ஆதரவு கூட ஊசலாடுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விமல் தரப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி