சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார, முதலில் காணாமல் போய் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் முகத்துவார காவல்நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.

அனுருத்த பண்டார, அரசாங்கத்துக்கு எதிரான முகநூல் பக்கத்தின் நிர்வாகியாக செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில், மோதரை பொலிஸில் இருந்து சென்றதாக கூறிக்கொள்ளும் குழுவினால் நேற்று இரவு அவர் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனாலும் பின்னர் மோதரை பொலிஸ் நிலையத்தில் அவ்வாறான ஒருவர் இல்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியது.

 இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. 

இவ்வாறான சூழலில் தற்போது அவர் மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர் தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சமூக ஊடக செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டார, சட்டத்தரணிகளின் உதவியை பெறுவதற்கு இடமளிக்குமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதனிடையே, அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டதற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

“சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக குறித்த  28 வயதுடைய இளம் சமூக செயற்பாட்டாளர் கம்பளை, எத்கல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்  தெரிவித்துள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி