தம்மிக பண்டார என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கொவிட் வைரஸை ஒழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சாதிக்காயாக இருந்தாலும் அது சம்பந்தமான நோய்களுக்குப் பயன்படுத்தப்படுவதல்ல என ஆயுர்வேத விசேட வைத்தியர் ஆனந்த விஜேரத்ன கூறுகிறார்.

சாதிக்காய் என்பது அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களுக்குப் பயன்படுத்தப்படு்வதாகுமெனவும் அவர் கூறுகிறார். கோவிட் தொற்றிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாமையால் பொருளாதார இலாபத்திற்காக பல்வேறு நபர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதாகக் கூறும் அவர் தொடர்ந்து விளக்கமளிக்கும் போது

“கொவிட் வைரஸினால் தாக்கப்படுபவர்கள் எப்படியும் சுகமடைவார்கள். வயதானவர்கள் போன்ற பலவீனமானவர்கள் இறக்கிறார்கள். உடலில் பலமிருந்தால் நோய் குணமாகும். பானியை அறிமுகப்படுத்தும் இந்த நபர் பாரம்பரிய வைத்தியரோ, பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியரோ அல்ல. இப்பபோது சிலர் சொல்கிறார்கள் பூனை மண்ணால் செய்யப்பட்டதாக இருந்தாலும் எலி பிடிப்பதாயிருந்தால் நல்லது தானே என்று. ஆனால் அது எலி பிடிக்க மாட்டாதல்லவா.

இந்த நபர் மருந்துகளி பட்டியலை சொல்வதுமில்லை. தேன் பானியயையும் சாதிக்காயையும் பற்றி சொல்கிறார். ஆனால் சாதி்ககாய் என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் காய்ச்சலுக்கோ அதைச் சார்ந்த நோய்களுக்கோ கொடுப்பதல்ல. வௌ்ளைப் பூடு, இஞ்சி, கொத்தமல்லி என்று சொன்னாலாவது நம்ப முடியும். சாதிக்காய் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்திற்கும், வாசனைத் திரவிய உற்பத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. தேன் பானி சிறந்த உணவும் மருந்துமாகும்.

ஆயுவேத மருத்துவவியல் முன்னேற்றமடைந்துள்ள இந்தியாவிலும் கொவிட்டினால் மனிதர்கள் இறக்கிறார்கள். நான் ஆயுர் வேத வைத்தியர் என்ற போதிலும் எமது குறைபாடுகள் எனக்குத் தெரியும். ஒரு மனிதர் மருந்து தருவதாயிருந்தால் அந்த மருந்தைப் பற்றி நாங்கள் அறிய வேண்டும். இந்த மனிதரி பின்னால் பொருளாதார இலாபங்களை எதிர்ப்பார்த்து ஒருவர் இருப்பது தெரிகிறது. அதனால் தான் படித்த அனுபமிக்க மருத்துவர்கள் இருக்கும் இந்நாட்டில் சாதாரண ஒரு மனிதர் வந்து மருந்து கண்டு பிடித்ததாகக் கூறுகிறார்.

இவ்விடத்தில் ஒரு மோசடி நடைபெறவிருந்தது. இந்த பானி குறித்து ஆயுர்வேத வைத்தியர்களை அழைத்து விசாரித்தால் நாம் கருத்தைக் கூறுவோம். கொவிட் வைரஸுக்கு இப்படியொரு பானி இருந்தால் அதை முழு உலகிற்கும் வழங்க முடியும். ஒவ்வொரு மேதாவிகளும் இதனை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். இது ஒரு மருந்தல்ல உணவு. வௌிநாடுகளுக்கு அனுப்பினால் இதை food supplement என்றே அழைப்பார்கள்” என்று கூறினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி