மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும், அதன் பண்பாடு தழுவிய விழுமியங்களோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள் என பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் நிகழ்த்திய உரையில்

இலங்கைத் தீவிலும், உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நெருப்பாய் எரிந்து, அவர்களின் நெஞ்சைப் பிழிந்து தம் பிள்ளைகளின் நினைவுகளைச் சுமக்கும் மகத்தான நாளே மாவீரர் நாளாகும்.
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும், அதன் பண்பாடு தழுவிய விழுமியங்களோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாளாகும்

தாய்மார்களது கண்ணீரையும், ஆற்றாமையையும் பயங்கரவாதம் என்று பச்சை குத்துவது பாராளுமன்றத்திற்கும் அதன் செங்கோல் தர்மத்திற்கும் ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளின் முன் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்கள் இதுவரை களையப்படவில்லை. அவை அனைத்தும் எரியும் பிரச்சனைகளாக இன்னும் எம்முன்னே எழுந்து நிற்கின்றன. அவை பற்றி பேச முனைகிற போதெல்லாம் எங்கள் குரல்வளைகள் மாத்திரமல்ல எம் இனத்தின் குரல்வளைகளே இறுக நெரிக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி