உள்ளூர் நாட்டரிசி, உள்ளூர் சிவப்பு அரிசி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைப் பச்சரிசி தவிர
அனைத்து அரிசி வகைகளின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளதாக, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட அரிசி வகைகளில், கீரி சம்பாவின் விலை ஒரு கிலோகிராமுக்கு 22 ரூபாய் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அம்மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஒரு கிலோகிராம் உள்ளூர் சிவப்பு பச்சரிசியின் சில்லறை விலை 2 ரூபாயால் குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, ஒரு கிலோகிராம் உள்ளூர் சிவப்பு பச்சரிசியின் அதிகபட்ச விலை 13 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க