முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்று நாட்கள் பயணமாக நாளை மறுதினம் (08) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நான்காவது முறையாக இந்தியாவுக்கு பயணிக்கிறார்.
'தி இந்து' பத்திரிகையின் ஐந்தாவது பதிப்பு தொடர்பாக இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறும் விழாவில் சிறப்புரையாற்ற, ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் ஸ்ரீ சித்தராமையா, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இரண்டு நாள் நடைபெறும் இந்த நிகழ்வில், அரசியல், வணிகம், கல்வி, விளையாட்டு மற்றும் கலைத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.