-எச்.எம்.எம்.பர்ஸான்

பாசிக்குடா கடலில் நீராடிய நபரொருவர் இன்று வெள்ளிக்கிழமை (10) நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ரஷ்யா நாட்டவர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் இன்று  காலை 7.30 மணியளவில் பாசிக்குடா கடலில் நீராடும் போது 64 வயதுடைய ரஷ்யா நாட்டு வெள்ளைக்காரர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

01.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி