கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக, வன்னியில் உள்ள மிகப்பெரிய
மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று, இராணுவத்தால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவீரர் துயிலும் இல்லத்தை முழுமையாக விடுவிக்கக் கோரும் மகஜரொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நோக்கத்தில் கையொப்பங்களைச் சேகரிக்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - விஸ்வமடுவில் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்ல நினைவுக் குழுவினால், தேராவில் மாவீரர் கல்லறைக்கு முன்பாக கையொப்பங்களைச் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.