நாடாளுமன்ற உறுப்பினர்
காதர் மஸ்தானை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (26) தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதன்படி, சந்தேக நபருக்கு ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிவான், அதனை 5 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபருக்கு 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.