புதிய நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு பாராளுமன்றத்தில் இடம்பெறும் நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அஷ்ரப் தாஹிர் கொழும்பில் இருந்தவாறே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்ப்பு கொண்டு வெள்ள நிலைமை மற்றும் அனர்த்தங்கள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இதனையடுத்து, வெள்ள நிலைமைகளைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இதேவேளை, நிந்தவூர் பிரதேசத்தில் மழை நீர் வடிந்தோடச் செய்யும் பணிகள் துரிதப்படுத்துப்பட்டுள்ளன.
நிந்தவூர் பிரதேசத்தில் நீர் வடிந்தோட முடியாமல் அடைப்பட்டு கிடந்த வடிகான்களை துப்பரவு செய்யும் பணி இன்று காலையிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

குறித்த நடவடிக்கைள் நிந்தவூர் பிரதேச சபையின் JCB இயந்திரம் மற்றும் ஊழியர்களின் உதவியுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின. ஆளணியினரின் உதவியுடனும் அவரது பிரதிநிதிகள் குழுவினரும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.