ஐக்கிய மக்கள் சக்தியின்
தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை தாம் கோரியுள்ளதாக அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.
தனது கட்சியில் அதிக வாக்குகளைப் பெற்ற பத்து பேரில் தானும் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தனக்கும் குருணாகல் மாவட்ட மக்களுக்கும் நீதி கிடைக்கும் என நம்புவதாக அவர் கூறுகிறார்.
எம்.பி., பதவி கிடைக்காவிட்டால், கட்சியை விட்டு விலகுவேன் என்ற நம்பிக்கை இல்லை அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தனது கோரிக்கையை முன்வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.