சர்வதேச நாணய நிதியத்தின்

கடன் திட்டம் மூன்றாவது மீளாய்வு  பணியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், 2025 ஆம் ஆண்டு வரவு -செலவுத் திட்ட ஆவணம் சமர்ப்பிக்கப்படும் வரை கடனின் நான்காவது தவணை பெறுவது தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி அடுத்த கடன் தவணையைப் பெறுவது அடுத்த ஆண்டு மார்ச் வரை மாதம் தாமதமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை மற்றும் செயற்குழுவின் அனுமதி அடுத்த வருட -வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே கிடைக்குமென நம்பப்படுகிறது.

அத்துடன் அந்த வரவு - செலவுத்திட்டத்தின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்நிபந்தனைகளை நிறைவேற்றுவது அவசியமாவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நோக்கங்களுக்கு அமைவாக எதிர்வரும் வரவு செலவுத் - திட்டத்தை முன்வைப்பது உள்ளிட்ட முன் நடவடிக்கைகளை  இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி