கொழும்பு கிராண்ட்பாஸ்
பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 17 வயதுடைய வெல்லம்பிட்டிய, வெஹரகொடல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்.
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் பிரவேசித்த குழுவினர் உயிரிழந்தவருடன் இருந்தவர்களுடன் தகராறு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொலையுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை 2 வாள்கள் மற்றும் குற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31, 32 மற்றும் 36 வயதுடைய வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
கிராண்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்