பொதுத் தேர்தலில் போட்டியிட்டு
தோல்வியடைந்த எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கக் கூடாது என கட்சியின் அடிமட்டத்திலிருந்து கட்சியின் தலைமைக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கே அந்தப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப்பட்டியலில் மூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதை தாம் கடுமையாக எதிர்க்கப் போவதாக அவர்கள் கட்சிக்கு அறிவித்துள்ளனர்.