வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க
முன்வராத காரணத்தினால் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (25) தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையானார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவிட்டார்.
அதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், எதிர்வரும் நீதிமன்றத் திகதியில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
2016ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்படி வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் சுப்ரமணியம் மனோகரனுக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.