மன்னார் மாவட்டத்தில்

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களைஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் (25) நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அத்துடன்மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களையும் பார்வையிட்ட அவர்மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடனும்கலந்துரையாடினார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் பின்னர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்  கூறியதாவது,

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாகசுமார் 7500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம்,

மேலும்வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிட்டதோடுபெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ள மக்களையும் சந்தித்துப் பேசினோம்.

குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதால்உணவுகளை சமைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவேஇது தொடர்பில்மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகத்துடனும்மேலதிக செயளாலருடனும்பேசியுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வழங்குவதற்கும்உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளோம்.

வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான பணிகளைபிரதேச செயலகம்பிரதேச சபைநகரசபை மற்றும் RDA, RDD, போன்ற அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொள்ளுமாறுஅரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மேலும்அந்தப் பணிகளை செய்வதற்கான நிதி வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம்எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாகஎதிர்வரும் தினங்கள் மிகவும் ஆபத்தாக காணப்படுவதால்பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன்மக்களின் பாதுகாப்புக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளோம்.

அத்துடன்பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாத்திரமே உணவுகள் வழங்கப்படுகின்றது எனவும் வெள்ளத்தினால் வெளியேற முடியாமல் வீடுகளிலேயே தங்கியுள்ள மக்களுக்கு உணவுகள் வழங்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது. இது குறித்துதுரித கதியில் கவனம் செலுத்திபாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும்வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் இருக்கும் மக்களுக்கும் தேவையான உலர் உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளை வழங்குவதற்குஉரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று கூறினார்.

468527752 1124403179032799 8083630370761098107 n

468452470 1124402015699582 5194032251752846615 n

468235521 1124402312366219 4675165232495164411 n

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி