(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தில்

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவுர், இறக்காமம், கல்முனை, சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

qazx 42

தாழ்ந்த பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில்  உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் உயர்ந்துள்ளதுடன்  சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

IMG 20241125 134000 800 x 533 pixel

மேலும், மீனவர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி