புதிய வர்த்தக அமைச்சர்
வசந்த சமரசிங்கவுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல கடிதங்கள் அனுப்பியும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைக்கு அவர் இதுவரை வரவில்லை என பொலிஸார் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, தெஹிவளையில் தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் தொழிற்சங்கத்துக்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்துடன் கூடிய சொத்தை குத்தகைக்குப் பெறுவதற்கு போலி பத்திரத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள்தொடர்பில் மோசடி விசாரணைப் பணியகம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தொழில் பிரதியமைச்சரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளருமான மஹிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரையும் வாக்குமூலம் வழங்க வருமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.