சுகாதார அமைச்சின் செயலாளர்
பதவியிலிருந்து விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால இராஜினாமாச் செய்துள்ளார்.
அவருக்குத் தெரிவிக்காமல் அந்தப் பதவிக்கு பொறுப்பு செயலாளர் நியமிக்கப்பட்டதன் காரணமாகவே அவர் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நிர்வாக அதிகாரிகளில் ஐந்து பேர் சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகிய இருவருமே வைத்திய நிபுணர்கள் என்பதால் வைத்தியர் அல்லாத நிர்வாக அதிகாரி ஒருவரை சுகாதார செயலாளர் பதவிக்கு நியமிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான திருமதி வத்சலா பிரியதர்ஷனி நியமிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை அப்பதவியை பொறுப்பேற்றுள்ளார்.