ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின்
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச். எம். எம். ஹரீஸ் அக்கட்சியின் உயர்பீட உறுப்புரிமையிலிருந்து உடனடியாக இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான இடை நிறுத்த கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தன்னிலை விளக்கத்தை அவர் ஒருவார காலத்துக்குள் வழங்காவிட்டால் நிரந்தரமாக நீக்கப்படுவார் என்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
