உத்தியோகபூர்வ கடமைகளுக்கு
அமைச்சு வழங்கும் வாகனத்தையே தான் பயன்படுத்த வேண்டும் என்றும் குடும்ப வாகனத்தை கடமைக்குப் பயன்படுத்த முடியாது என்றும் பெண்கள் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறுகிறார்.
கணவர் வைத்தியர் என்றும் அவருக்கு வாகனம் இருப்பதாகவும் தனக்கும் வாகனம் இருப்பதாகவும் தேர்தல் காலத்தில் நண்பர்கள் கொடுத்த வாகனத்தை தான் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையில் வாகனம் தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.