10ஆவது பாராளுமன்றத்தின்
புதிய சபாநாயகர் அசோக ரன்வல அணிந்திருந்த தலை அங்கியின் இரண்டு கீழ் முனைகளும் தவறுதலாக இணைந்துள்ளதாக பாராளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் வாரப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றும், கவனக்குறைவால் இது நடந்ததாகவும், பின்னர் அது உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலை அங்கியின் இரண்டு கீழ் முனைகளையும் இணைப்பதற்கு பொத்தான்கள் இல்லை என்றும் இரு முனைகளும் திறந்தே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப நாளன்று புதிய சபாநாயகரின் தலை அங்கி ஒன்று சேர்க்கப்பட்படது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.