இலங்கையின் உள்நாட்டுப்
போரின்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட மூவருக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரித்தானியாவைக் கேட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஷவேந்திர சில்வா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஆகியோருக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் குழுவான "சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம்
பொறுப்புக் கூறலுக்கான உலகளாவிய இயக்கத்தை வலுப்படுத்தவும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு ஆதரவளிக்கவும் ஐக்கிய இராச்சியத்துக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஐ.நா.வினால் நிறுவப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் சாட்சியங்களைப் பாதுகாத்தல் மற்றும் நீதியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகின்றன, ஆனால் சர்வதேச அழுத்தம் இல்லாமல், இந்த முயற்சிகள் தடைபடும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.