கடந்த பாராளுமன்ற தேர்தலில்

புத்தள மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளரும் புத்தள மாவட்ட அமைப்பாளருமான என்.ரீ தாஹீருக்கு வாக்களித்த மக்களுக்கு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நன்றி கூறினார்.

நேற்று (23) மாலை ஏத்தாழையில் உள்ள தாஹிரின் இல்லத்தில் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் தாஹிர் மற்றும் எம்.எச் முஹம்மத் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் பரிந்துரையின் அடிப்படையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு இரு ஆசனங்கள் புத்தளம் மாவட்டத்தில் உரித்தான நிலையில் என்.ரி. தாஹிர் மூன்றாவது இடத்தை அடைந்திருந்தார்.

1000576638 800x445

இந்த நிலையில் இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்த சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்.

தேசியப்பட்டியலுக்கு எமது கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு  ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்பி கிடைக்கும். இதனை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச  உறுதிப்படுத்தியாக இதன்போது ரிஷாத் பதியுதீன்  தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி