தேசிய பட்டியல் நியமனம்

தொடர்பில் எதிர்காலத்தில் அறியத் தருவோம். அவை முறையான ஒழுங்கில் முன்னெடுக்கப்படும்.

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இன்று (23) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.  

உண்மையைச் சொல்வதானால், பட்டியலில் உள்ள அனைவரும் மிகவும் பொருத்தமானவர்கள். நாட்டை கட்டியெழுப்புவதில் இவர்கள் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருக்க வேண்டும். இந்த பட்டியலில் மிகவும் அநுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர். வீழ்ச்சி கண்டுள்ள நாட்டையும் 220 இலட்சம் மக்களையும் மீட்டெடுப்பதே தனது எண்ணப்பாடாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை குறித்து நாட்டு மக்களாலே ஒரு முடிவுக்கு வரலாம். பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமையவே அனைவரும் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றும் கொள்கைகள் காணப்படுகின்றன. இந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை நம்பும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நேர்மறையான கருத்துக்கள் உள்ள அனைவரும் எம்மோடு சேரலாம். இந்தக் கொள்கைகளோடு இணங்குபவர்கள் எம்மோடு சேர்ந்து கொள்ளலாம் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி