2020 ஆம் ஆண்டு மஹர
சிறைச்சாலையில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருந்த நிலையில் சட்டமா அதிபர் வழக்கை முடித்து வைத்தமை ஆச்சரியமளிப்பதாக வெலிசர நீதிவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையின் கைதிகள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர்,
தலை, வயிறு, மார்பு போன்ற இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 11 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக வெலிசர நீதவான் நீதிமன்றில் தெரிய வந்துள்ளது.
இது குற்றம் என நீதிவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது சட்டமா அதிபரின் கருத்தை ஏற்க வேண்டுமா என இந்தச் சம்பவத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.