வாகரை பகுதியில் மின்சார

சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக் கிழமை (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி  கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டை மேற்கொள்வதால் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம பொதுமக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை  முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
IMG 20241122 163750 800 x 533 pixel
 
"துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே", "மின்சார சபையே மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே" போன்ற வாசகங்களை பொறித்த பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,
 
இன்றில் இருந்து ஒரு வார காலத்துக்குள் மின்சார துண்டிப்பு பிடிச்சினை நிவர்த்தி செய்யப்படாவிட்டால் இப்பிரச்சனையினை . நாம் கெளரவ ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் இம்மக்கள் தெரிவித்தனர். 
 
இதன் போது வாகரை பொலிஸார் ஸ்தலத்துக்கு வருகை தந்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
 
தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபனிடம் மகஜரை கையளித்ததனைத் தொடர்ந்து பிரதே செயலாளரின்  வாக்குறுதியைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி