பத்தாவது பாராளுமன்ற
அமர்வு நேற்று (21) ஆரம்பமானபோது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து பாராளுமன்ற உத்தியோகத்தர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுன் இராமநாதனின் உறுப்புரிமை பறிக்கப்படலாம் என தெரிய வருகிறது.
மருத்துவ நிபுணராக பணியாற்றிய போதே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதே அதற்குக் காரணம்.
இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் பணியாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது.
எனவே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பது பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளதாகவும் இது எதிர்காலத்தில் சவாலாக அமையும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் ராஜித சேனாரத்னவும் தனது தொழிலை விட்டு விலகாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்ததற்காக அவர பதவியில் இருந்து நீக்கப்பட்டது தெரிந்ததே.