ஐக்கிய மக்கள் சக்தியின்
எஞ்சிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி 5 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வென்றுள்ளதுடன் அதன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார அவற்றில் ஒன்றில் ஏற்கனவே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதன்படி, எஞ்சிய 4 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான பெயர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.