தாம் இதற்கு முன்னர் தீவிர
அரசியலில் ஈடுபடவில்லை எனவும் உள்ளூராட்சி மன்றத்தை கூட பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி துஷாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை பாராளுமன்றம் பிரவேசித்தமை மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நுழைவேன் என்பதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருக்கவில்லை என்று கூறும் அவர், இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக தனிப்பட்ட முறையில் சுமார் ஒரு இலட்சம் ரூபா செலவிட்டதாகவும் கூறுகிறார்.
தனது அரசாங்கம் மக்களுக்காக உழைக்காவிட்டால், கடந்த அரசாங்கத்தை விட மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்புவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எம்.பி.க்களுக்கு அரசியலில் கிடைக்கும் சலுகைகளில் சில சமயங்களில் உத்தியோகபூர்வ இல்லம் தேவைப்படலாம் என்றும் ஆனால் அதற்காக தாம் விசேட கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறுயுள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியுடன் கலந்துரையாடிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.