ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்பியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிசாம் காரியப்பரின் பெயர் இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படாத நிலையில் தனது கட்சியைச் சேர்ந்த மற்றொருவரின் பெயரை நிசாம் காரியப்பர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.