இன்று (21) பாராளுமன்றம் கூடியபோது
எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமர்ந்தமை தொடர்பில் சிக்கலான நிலைமை எழுந்தது.
யாழ்.மாவட்டத்திலிருந்து உத்தியோகத்தராகவும் பாராளுமன்ற சுயேச்சைக் குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கும் தினத்தன்று தனக்கு விருப்பமான இடத்தில் அமருமாறு அறிவித்துள்ள நிலையில், தனது ஆசனத்தை காலி செய்யுமாறு கோருவது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த ஆசனம் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் என்பதால் நாடாளுமன்ற அதிகாரி வேறு ஆசனத்துக்குச் செல்லுமாறு கூறினார்.
ஆனால் எம்பி தொடர்ந்து மறுத்ததால் அந்த அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார்.
இநஎதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தைத் தவிர வேறு ஆசனத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அமர்ந்திருந்தார்