தம்மீதும் அரசாங்கத்தின் மீதும்

நம்பிக்கை வைத்து எமக்கு அதிகாரத்தை வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரையும் இந்நாட்டு பிரஜையாகவே பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் தனது கன்னி அமர்வில் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து வருகிறார்.

கொள்ளைப் பிரடனத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் மக்களுக்கான பொறுப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், நாம் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தேர்தல் பிரசாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், இலங்கையில் மீண்டும் இனவாத அரசியலுக்கு எமது நாட்டில் இடமில்லை என்றும் எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை. 

ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக இனவாத, மதவாத, கோஷங்களை எழுப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என நான் உறுதியளிக்கிறேன்.

அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், பாராளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்லமுடியாது.

திறமையான பொதுச்சேவை, மக்களின் நல்வாழ்வுக்காகச் செயல்படும் பொதுச் சேவை இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக அரசு ஊழியர்களிடம் இருந்து எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். அதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது. அரசியல் மாற்றங்கள் வரலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத ஜனநாயக மற்றும் சுதந்திரமான அரசை உருவாக்குவது நமது பொறுப்பு. அதை நிறைவேற்றுவோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

சட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களிடம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நாட்டில் நடந்தது சட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு மீது சாமானிய மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. வலுப்படுத்தாமல் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முடியாது, சட்டத்தின் மீதுள்ள மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவார்கள் என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். சட்டம் மற்றும் அனுமதிக்கும் ஒரு நாட்டை நாங்கள் விரும்புகிறோம் என்றார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி