முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க இன்று (21) காலை இந்தியாவின் புதுடில்லிக்கு சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
மத்திய இந்தியாவின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி நிறுவனத்தில் ரணில் விக்கிரமசிங்க விரிவுரை நிகழ்த்தவுள்ளார்.
அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவரும் இவருடன் சென்றுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விரிவுரை நாளை (22) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.