புதிய பாராளுமன்றத்தின்
சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான ரன்வல, இவ்வருட பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 1,09,332 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.
முன்னாள் மேல் மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான அசோக ரன்வல பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியதுடன் இவர் தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
கலாநிதி ரன்வல பியகம தொகுதியை மையமாக வைத்து தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.