ஜுலம்பிட்டியவைச் சேர்ந்த
அமரே என்ற ஜீ.ஜி.அமரசிறிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21) உறுதி செய்தது.
2012 ஆம் ஆண்டு கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற ஜே.வி.பி கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி இருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டுக்கே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் அவருக்கு தங்காலை உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தத் தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஜுலம்பிட்டிய அமரே தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன், குமரன் ரட்ணம் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மரண தண்டனை உறுதிப்படுத்தினர்.