(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக இவரது பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த முஹமது இஸ்மாயில் முத்து முஹமத் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்கிறார்.
இது இவ்வாறிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை அறிவித்து, அதிவிசேட வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.