சர்வதேச நாணய நிதியத்தின்

இலங்கைக்கு பொறுப்பான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (18) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து வியப்புடன் தெரிவித்த பிரதிநிதிகள், எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ள வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், இதுவரையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் ஆற்றிய பணியை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதாகத் தெரிவித்தார்.

நெகிழ்வான அணுகுமுறையை பின்பற்றி தற்போதைய அரசாங்கத்துக்கு பூரண ஆதரவை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் சமரதுங்கவும் கலந்து கொண்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி